Connect with us

‘வேட்டையன்’ படப்பிடிப்பின் முதல் நாள்.. பிரபல நடிகர் வெளியிட்ட டக்கர் போட்டோ..!!

Cinema News

‘வேட்டையன்’ படப்பிடிப்பின் முதல் நாள்.. பிரபல நடிகர் வெளியிட்ட டக்கர் போட்டோ..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தனது முதல் நாள் படப்பிடிப்பு குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள ராணா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றையும் போட்டுள்ளார்.

ஞானவேல் இயக்கும் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் , அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.

ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முதல் நாள் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக பிரபல தெலுங்கு நடிகரான ராணா படத்தின் கெட்டப்புடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையுள்ள நிலையில் இந்த படத்தில் இன்று முதல் நாள் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக நடிகர் ரானா டகுபதி தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு நெகிழ்ச்சி பதிவை போட்டுள்ளார் .

ரசிகர்கள் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி வரும் இந்த படத்தின் அடுத்த கட்ட அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில் இப்படத்தின் அப்டேட் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இழிவான முறையில் பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி - செல்வப்பெருந்தகை விமர்சனம்

More in Cinema News

To Top