Connect with us

அக்காவின் போட்டுவை பகிர்ந்து எமோஷனலான யுவன் ஷங்கர் ராஜா- வைரல் போட்டோ

Cinema News

அக்காவின் போட்டுவை பகிர்ந்து எமோஷனலான யுவன் ஷங்கர் ராஜா- வைரல் போட்டோ

உடல்நலக்குறையால் உயிரிழந்த இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணியின் புகைப்படத்தை வெளியிட்டு யுவன் சங்கர் ராஜா எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் யாராலும் பெற முடியாத புகழை பெற்று திரையுலகின் பொக்கிஷம் என ரசிகர்களால் அன்போடு போற்றப்படுபவர் இசைஞானி இளையராஜ .

இவருக்கு பவதாரணி என்ற மகளும் , கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா என இரு மகன்களும் உள்ளனர் .

மூவருமே தந்தையை போல் இசை சார்ந்த விஷயங்களில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர் அதிலும் குறிப்பாக யுவனின் இசைக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது .

இதில் தந்தை மற்றும் சகோதரர்கள் இசையமைத்த படங்களில் மட்டும் அதிகம் பாடியுள்ளார் பவதாரிணி . இளையராஜா இசையில் பாரதி படத்தில் பாடிய மயில்போல பொண்ணு பாடலுக்கு சிறந்த பெண் பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் பவதாரிணி பெற்றுள்ளார் .

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பவதாரிணி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 25 ஆம் தேதி உயிரிழந்தார் .

பாவதாரணியின் மரணம் இளையராஜாவின் குடும்பத்தை மட்டும் பாதிக்காமல் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் உடல்நலக்குறையால் உயிரிழந்த இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணியின் புகைப்படத்தை வெளியிட்டு யுவன் சங்கர் ராஜா எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மறைந்த தனது அக்கா, மகளுடன் எடுத்த கியூட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்குகளை பெற்று ஏகப்பட்ட கமெண்டுகளையும் பெற்று வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஈடன் கார்டனில் இன்று வெற்றிநடை போடப்போவது யார்..? கொல்கத்தா - பஞ்சாப் அணிகள் இன்று மோதல்..!!

More in Cinema News

To Top