Connect with us

தலைக்கேறிய மது போதையில் தாறுமாறாக ஜேசிபி ஓட்டிய இளைஞர் – தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…

Featured

தலைக்கேறிய மது போதையில் தாறுமாறாக ஜேசிபி ஓட்டிய இளைஞர் – தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…

கர்நாடகாவில் தலைக்கேறிய மது போதையில் தாறுமாறாக ஜேசிபி ஓட்டிய இளைஞருக்கு பொதுமக்கள் ஒன்றுகூடி தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நடைபெற்ற வார சந்தையின்போது தலைக்கேறிய மதுபோதையில் இளைஞர் ஒருவர் ஜேசிபி வாகனத்தைத் அங்கும் இங்கும் தாறுமாறாக ஓட்டி சென்றுள்ளார்.

அசுர மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் ஒரு தினுசாக வாகனத்தை ஓட்டியதை கண்ட பொதுமக்கள் அந்த இளைஞரை பிடிக்க முயன்றபோது இன்னும் வேகமாக ஜேசிபியை ஓடிச்சென்று சாலை ஓரத்தில் இருந்த கடைகளில் ஏற்றி பெரும் பொருட்சேதம் விளைவித்துள்ளார் .

ஒருகட்டத்தில் பொறுமை இழந்த அப்பகுதியில் இருந்த மக்கள் அந்த இளைஞரை பிடித்து வண்டியில் இருந்து கீழே இறக்கி தர்மஅடி கொடுத்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மக்களிடம் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் இருந்த அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் பீகாரை சேர்ந்த என்பது தெரிய வந்துள்ளது . ஜேசிபி ஓட்டுநராக இவர் மது போதையில் இந்த செயலை செய்ததாக ஒப்புகொண்டாடத்தை அடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலம் விட்டு மாநிலம் வந்து தலைக்கேறிய மது போதையில் சேட்டை கொடுத்த இளைஞருக்கு பொதுமக்கள் ஒன்றுகூடி தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Actress to Wildlife Photographer! 🐅🎥 மாளவிகாவின் அசத்தல் திறமை!

More in Featured

To Top