Connect with us

“நான் சவுதியில் இருந்து வந்திருக்கேன்! யோகிபாபுவின் ‘Kuiko’ பட Trailer வெளியானது!”

Cinema News

“நான் சவுதியில் இருந்து வந்திருக்கேன்! யோகிபாபுவின் ‘Kuiko’ பட Trailer வெளியானது!”

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு அவ்வப்போது நாயகனாகவும் நடித்து வருகிறார் என்பதும் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படங்கள் சில நல்ல வெற்றியை பெற்று வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ள இன்னொரு திரைப்படம் ‘குய்கோ’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கிராமத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த யோகி பாபுவுக்கு ஒரு பெண்ணின் மீது காதல் வர, காதலியின் அண்ணன், மாடு மேய்க்கிறவனுக்கு பெண் தரமாட்டேன் என்று கூறிவிடுகிறார். இதனை அடுத்து கோபத்தில் அவர் சவுதி சென்று பணக்காரராக யோகிபாபு மாறிவிடுகிறார்.

நிலையில் தனது தாயார் மரண செய்தி கேட்டு ஊருக்கு வரும் நிலையில் தனது அம்மாவின் பிணத்துடன் சேர்த்து ஐஸ் பெட்டியையும் காணவில்லை என்பதை அறிகிறார். அந்த ஐஸ்பெட்டியை அவர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் காமெடி திரைக்கதை.

யோகி பாபு மற்றும் விதார்த் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அருள் செழியன் இயக்கி உள்ளார். அந்தோணி தாசன் மற்றும் கெவின் மிராண்டா இருவரும் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர். இந்த படம் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பேட்டிங்கில் சீறிப்பாய்ந்த டெல்லி அணி - லக்னோவுக்கு 209 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top