Connect with us

“புதிய படத்தில் ஹீரோவாக பிக் பாஸ் சிபி! பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்!”

Cinema News

“புதிய படத்தில் ஹீரோவாக பிக் பாஸ் சிபி! பூஜையுடன் தொடங்கிய ஷூட்டிங்!”

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர், சிபி. இவர் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ அஜித்தின் ’துணிவு’, சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படங்களில் நடித்துள்ளார்.

2018-ம் ஆண்டு வெளியான ‘வஞ்சகர் உலகம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்நிலையில் சிபி ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மிஷ்கின் உதவியாளர் பிரகாஷ் கிருஷ்ணன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் சிபி ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இவருடன் குஷிதா கல்லப்பு, லிஸி கணேஷ், பருத்திவீரன் சரவணன், ஜெயபிரகாஷ், நிரோஷா உட்பட பலர் நடிக்கின்றனர். கிரவுன் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எம்.இப்ராகிம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பாபு தமிழ், திரைக்கதை எழுதுகிறார்.

இவர் வரவேற்பைப் பெற்ற ‘ஜீவி’ படத்துக்கு வசனம் எழுதியவர். கோபி கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கபீர் வாசுகி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த 20-ம் தேதி சென்னையில் தொடங்கி நடந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

More in Cinema News

To Top