Connect with us

மறைந்த செல்ல நாய்க்காக மாபெரும் கின்னஸ் சாதனை படைத்த பெண்..!!

Featured

மறைந்த செல்ல நாய்க்காக மாபெரும் கின்னஸ் சாதனை படைத்த பெண்..!!

மறைந்த செல்ல நாய்க்காக மாபெரும் கின்னஸ் சாதனையை படைத்துள்ள பெண்ணின் செயல் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது .

அமெரிக்காவை சேர்ந்த க்றிஸ்ட்டி பெல்மர் என்ற பெண்மணி சைக்கிள் பயணம் மேற்கொண்டு உலகின் மிகப்பெரிய GPS ஓவியம் வரைந்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

மறைந்த தனது செல்ல நாயின் நினைவாக இந்த சாதனையை படைத்துள்ள க்றிஸ்ட்டி, சுமார் 4,707 கிலோ மீட்டர் தூரம் ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் வழியே சைக்கிளில் பயணித்துள்ளார்.

இந்த பயணத்தின் போது க்றிஸ்ட்டி பெல்மர் இவர் வரைந்த GPS ஓவியம் அவரின் நாயை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

மறைந்த தனது செல்ல நாய்க்காக இப்படி ஒரு மாபெரும் கின்னஸ் சாதனையை படைத்துள்ள அந்த பெண்ணிற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top