Connect with us

டெல்லியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா..? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!!

Featured

டெல்லியின் தொடர் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடுமா கொல்கத்தா..? ஈடன் கார்டனில் இன்று பலப்பரீட்சை..!!

ரசிகர்களின் உற்சாக வெள்ளத்தில் விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறும் போட்டியில் கொல்கத்தா – டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் கொல்கத்தாவில் உள்ள உலக புகழ் பெற்ற ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் KKR – DC அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 3 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 2 ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி உள்ள ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி 5 போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 6 ஆவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top