Connect with us

அனல் பறக்கும் இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..? அகமதாபாத்தில் இன்று சென்னை – குஜராத் அணிகள் மோதல்..!!

Featured

அனல் பறக்கும் இன்றைய போட்டியில் வெல்லப்போவது யார்..? அகமதாபாத்தில் இன்று சென்னை – குஜராத் அணிகள் மோதல்..!!

விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நடப்பு IPL கிரிக்கெட் தொடரில் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளது .

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் அகமதாபாத்தில் உள்ள உலக புகழ் பெற்ற நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் தொடரின் 59 ஆவது லீக் போட்டியில் CSK – GT அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 போட்டியில் வெற்றி பெற்று 5 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது 4ஆவது இடத்தில் உள்ளது.

இதேபோல் இந்த பக்கம் நடப்பு தொடரில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி உள்ள கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 4 போட்டியில் வெற்றி பெற்று 7 போட்டியில் தோல்வியை சந்தித்து புள்ளிப்பட்டியலில் தற்போது கடைசி இடத்தில் உள்ளது.

இரு அணிகளுக்குமே இன்றைய போட்டி முக்கியமான போட்டி என்பதால் இன்றைய போட்டி நிச்சயம் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற போகிறது எந்த அணி தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழ் சினிமாவை கலங்க வைத்த R.B. Choudary மறைவு!

More in Featured

To Top