Connect with us

VJ மணிமேகலை 2000 சதுர அடியில் வாங்கிய பிரம்மாண்ட வீடு – முழு விவரம்!

Featured

VJ மணிமேகலை 2000 சதுர அடியில் வாங்கிய பிரம்மாண்ட வீடு – முழு விவரம்!

முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவராக விளங்கும் விஜே மணிமேகலை, சின்னத்திரையில் தனக்கென்ற இடத்தை பிடித்துள்ளார். தனது தொலைக்காட்சி பயணத்தை சன் மியூசிக் வழியாகத் தொடங்கிய அவர், பின்னர் விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் விருப்பமான முகமாக உயர்ந்தார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் இவருக்கு பெரும் புகழும், பெரிதான ரசிகர் வரவேற்பும் கிடைத்தது. கோமாளியாக மணிமேகலை செய்த நகைச்சுவைச் செயல் மற்றும் சேட்டைகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தன. இதன் மூலம் தனக்கென தனி ரசிகர் வட்டமும் உருவாகியது.

கொரோனா காலகட்டத்தில், தனது யூடியூப் சேனல் மூலம் ரசிகர்களுடன் நெருக்கமாக இருந்து, பலவிதமான வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் விஜய் டிவியில் இருந்து விலகிய மணிமேகலை, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், மணிமேகலை புதிதாக 2000 சதுர அடியில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட வீட்டை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் உள்ளமைப்பு மற்றும் அழகை காண்பிக்கும் வீடியோ ஒன்றை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றியுள்ளார். மேலும், அவரது புதிய வீட்டின் சில புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாதம்பட்டி ரங்கராஜால் பெண்கள் பலர் பாதிப்பு –ஜாய் கிரிஸில்டா அதிர்ச்சி தகவல்

More in Featured

To Top