Connect with us

ரசிகர்கள் காத்திருந்த குபேரா OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..

Featured

ரசிகர்கள் காத்திருந்த குபேரா OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு..

தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்று கலக்கி வரும் தனுஷ், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், சிங்கர் மற்றும் எழுத்தாளர் என பன்முக திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

தனுஷின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் குபேரா ஆகும். இந்த படம் தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாக்கப்பட்டு, ராஷ்மிகா மந்தனா மற்றும் நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். குபேரா திரைப்படம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இப்படத்தின் OTT ரிலீஸ் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குபேரா திரைப்படம் வரும் ஜூலை 18 ஆம் தேதி அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top