Connect with us

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரிய வந்த அதிர்ச்சி… முதல் மனைவி குறித்து விஷ்ணு விஷால் எமோஷனல் பேட்டி..

Featured

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரிய வந்த அதிர்ச்சி… முதல் மனைவி குறித்து விஷ்ணு விஷால் எமோஷனல் பேட்டி..

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜுவாலா கட்டா சமீபத்தில் பெற்றோர் ஆனார்கள். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு மிரா என பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் குழந்தையின் பெயரை ஹிந்தி நடிகர் அமீர் கான் வைத்தது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷாலுக்கு இது இரண்டாவது திருமணம். அவருக்கு முதல் மனைவி ரஜினி நடராஜ் உடன் ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது முதல் மனைவி ரஜினி குறித்து விஷ்ணு விஷால் உணர்ச்சிப்பூர்வமாக பேசியுள்ளார்.

“நாங்கள் நான்கு ஆண்டுகள் காதலித்து பிறகே திருமணம் செய்துக்கொண்டோம். திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பே அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்தது. ஆனாலும் கடைசிவரை ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதால் அவரை திருமணம் செய்துகொண்டேன். திருமணத்துக்குப் பிறகு பல ஆண்டுகள் அவர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.”

“அந்த நேரத்தில் நான் என் சினிமா பயணத்தில் அதிகமாக ஈடுபட்டிருந்தேன். இதனால் என்னால் அவர்மீது அக்கறை இல்லை என அவர் நினைத்துக்கொண்டார். சில சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. அதனால் விவாகரத்து என்பது அவர் எடுத்த முடிவாக இருந்தது, என்னுடையது அல்ல,” என அவர் கூறியுள்ளார். இந்த நேர்காணல் மூலம் தனது கடந்தகால வாழ்க்கையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸில் அர்ச்சனாவை போல் VJ பார்வதிக்கு வரும் குடச்சல், அவஸ்தைப்படும் சீரியல் பிரபலங்கள்

More in Featured

To Top