Connect with us

நடிகர் கிங் காங் மகளின் திருமணம் இன்று நிறைவு: ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை..

Featured

நடிகர் கிங் காங் மகளின் திருமணம் இன்று நிறைவு: ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனிக்கொண்ட இடம் பிடித்துள்ள நடிகர் கிங் காங், தனது மகளுக்கு இன்று திருமணம் நடத்தி வைத்தார். அவரது உண்மையான பெயர் சங்கர். “அதிசயப் பிறவி” படத்தில் இடம்பெற்ற அவருடைய நடனக் காட்சி, இன்று வரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகவே உள்ளது.

கிங் காங் வடிவேலுவுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டவை. இவரது நடிப்பு தமிழ் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றுவிட்டது என்றே சொல்லலாம். கடந்த சில வாரங்களாக கிங் காங், சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கும், அரசியல் நபர்களுக்கும் நேரில் சென்று தனது மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை வழங்கி வந்தார். அந்த அழைப்பின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகவும் பரவின.

இந்நிலையில், இன்று காலை அவரது மகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமண நிகழ்ச்சியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து கொண்டு, நடிகர் கிங் காங் மற்றும் அவரது குடும்பத்துக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top