Connect with us

ஹரி இயக்க விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரத்னம்’ என பெயர் சூட்டல்..!! விஷாலை ஜொலிக்க வைக்குமா இந்த ரத்னம்…

Cinema News

ஹரி இயக்க விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ரத்னம்’ என பெயர் சூட்டல்..!! விஷாலை ஜொலிக்க வைக்குமா இந்த ரத்னம்…

ஹரி மற்றும் விஷாலின் முரட்டு தனமான காம்போவில் உருவாக உள்ள புதிய படத்திற்கு ரத்னம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் ஆக்சன் படங்களுக்கு பெயர் போன இயக்குநராகவும் நடிகராகவும் விளங்குபவர்கள் ஹரி மற்றும் விஷால்.இவர்கள் இருவருமே தற்போது ஒரே படத்தில் கமிட்டாக உள்ளதாக சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாக அதனை பூஜை போட்டு உறுதி செய்தது படக்குழு.

நீண்ட நெடு நாட்களுக்கு பின் மார்க் ஆண்டனி என்ற சூப்பர் டூப்பர் வெற்றி படத்தை கொடுத்த விஷால் தற்போது தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கைகோர்த்துள்ளார் . இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் இப்பட்ட்டத்தில் நடிக்கிறார் .

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குநராக சூப்பர் சுப்புராயன் பணியாற்றி வரும் நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் கனல் கனல்கண்ணனை இப்படத்தில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் பெயரை அழகிய போஸ்டர் மூலம் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ‘ரத்னம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படம் விஷாலை ஜொலிக்க வைக்க போகிறதா இல்லையா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிக்கன் ரைஸ் சாப்பிட்டவர் உயிரிழப்பு - நாமக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

More in Cinema News

To Top