Connect with us

விஷால் – தன்ஷிகா திருமணம்.. பத்திரிகை வைக்கும் பணிகள் – எங்கே போயிருக்காங்க பாருங்க..

Featured

விஷால் – தன்ஷிகா திருமணம்.. பத்திரிகை வைக்கும் பணிகள் – எங்கே போயிருக்காங்க பாருங்க..

நடிகர் விஷால், தனது திரையுலக பயணத்தை நடிகர் அர்ஜுனின் உதவி இயக்குநராக துவங்கினார். பின்னர் “செல்லமே” படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி போன்ற ஹிட் படங்களில் நடித்தார்.

ஆனால் அந்த வெற்றிகளை தொடர்ந்து நிலைநிறுத்த முடியாமல் போனது. இடையில் சில படங்கள் மட்டும் தான் கைகொடுத்தன. விஷாலின் நடிப்பில் கடைசியாக வெளியான “மார்க் ஆண்டனி” படம் மட்டும் மிகப்பெரிய ஹிட்டாக மாறியது. ஆரம்பத்தில் இயக்குநராக ஆசைப்பட்ட விஷால், நடிப்பில் கவனம் செலுத்தி, ஆக்ஷன் ஹீரோவாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். ஆனால் “அவன் இவன்” போன்ற படங்களில் நடிப்பை பாராட்டினாலும், வெற்றிபெற முடியவில்லை.

அதற்கிடையே நடிகர் சங்க சர்ச்சைகள், சரத்குமாருடன் மோதல் என பல விஷயங்கள் நடந்தன. பின்னர் “மார்க் ஆண்டனி” திரைப்படம் எதிர்பாராதவிதமாக மெகா ஹிட்டானது. படம் 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்ததாக தகவல். அதன்பின் “ரத்னம்” படம் வெளிவந்தது. ஆனால் அது சாதாரண வரவேற்பு மட்டுமே பெற்றது. “துப்பறிவாளன் 2” படத்தில் மிஷ்கின் இயக்குவதாய் இருந்தும், விஷால் தான் அதை இயக்க முடிவெடுத்துள்ளார். படப்பணிகள் எப்போது தொடங்கும் என்பது தெரியவில்லை.

இதற்குமீது, முத்தையா இயக்கத்தில் அவர் ஒரு புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில், 47 வயதான விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் 29 ஆம் தேதி திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளார். “யோகிதா” பட விழாவில் தான் இந்த அறிவிப்பு வந்தது. இவர்களது காதல் தகவலும், திருமணம் குறித்த தகவலும் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணத்திற்கு இருமாத காலம் மட்டுமே உள்ளதால், திருமண ஏற்பாடுகள் முழுசாக தொடங்கியுள்ளன. திரையுலக நட்புகளுக்கு பத்திரிகை வழங்கும் பணியும் துவங்கியுள்ளது. அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top