Connect with us

“அடுத்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நயன்தாரா..! வெளியானது Cute புகைப்படம்..!”

Cinema News

“அடுத்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நயன்தாரா..! வெளியானது Cute புகைப்படம்..!”

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ’அன்னபூரணி’ திரைப்படம் டிசம்பர் ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணத்திற்கு பின்னரும் பிசியாக இருக்கும் நடிகையாக இருந்து வருகிறார். அவர் நடித்த ’அன்னபூரணி’ வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி ரிலீசாக இருக்கும் நிலையில் மாதவனுடன் ‘தி டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நயன்தாரா நடிக்க இருக்கும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வரும் நிலையில் தற்போது நயன்தாரா படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகைப்படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவிடுவது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் லக்ஷ்மன் குமார் இயக்கத்தில் உருவாகும் ‘மண்ணாங்கட்டி சின்ஸ் 1960’ படத்தில் நயன்தாராவுடன் யோகிபாபு, தேவதர்ஷினி, கௌரி கிஷன், நரேந்திர பிரசாத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி மதன் படத்தொகுப்பு பணியை செய்கிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிரியங்கா மோகனின் பிறந்தநாளில் ‘AGS 29’ படக்குழு வெளியிட்ட பிரெய்லி போஸ்டர்: கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top