Connect with us

மதயானைக் கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம் – பேருந்து பயணத்தின்போது மாரடைப்பு..

Featured

மதயானைக் கூட்டம் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் திடீர் மரணம் – பேருந்து பயணத்தின்போது மாரடைப்பு..

மதயானைக் கூட்டம் படத்தின் இயக்குநராக பெருமை பெற்ற விக்ரம் சுகுமாரன் இன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் தமிழ் சினிமா உலகத்திலும், ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வருடங்களுக்கு முன் அவர் இயக்கிய ‘ராவனக்கோட்டம்’ திரைப்படத்தில் நடிகர் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் விக்ரம் சுகுமாரன். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த விக்ரம் சுகுமாரன், சென்னைக்கு பயணம் செய்தபோது, அவர் பயணித்திருந்த பேருந்திலேயே திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். உடனடியாக மருத்துவ உதவி அளிக்க முயற்சித்தாலும், அவர் உயிரிழந்தார்.

அவரது திடீர் மரணம் சினிமா உலகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படத் துறையை சேர்ந்த பலர் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் சாந்தனு, தனது சமூக வலைதள பக்கங்களில் விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு உருக்கமான இரங்கலை பதிவு செய்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top