Connect with us

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் – நடிகர் ராம்கி வலியுறுத்தல்

Cinema News

நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் – நடிகர் ராம்கி வலியுறுத்தல்

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரை நடிகர் சங்க கட்டிடத்துக்கு வைக்க வேண்டும் என நடிகர் ராம்கி வலியுறுத்தியுள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த்திற்கு நுரையீரல் அழற்சி காரணமாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி நேற்று காலை உயிரிழந்தார்.

சினிமா அரசியல் என இரண்டிலும் முடிசூடா மன்னனாக வலம் வந்த கேப்டன் விஜயகாந்தின் மரண செய்தி கேட்டு தமிழகமே சோக கடலில் மூழ்கியுள்ளது.அவரது உடலுக்கு நடிகர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் .

இதையடுத்து இன்று மாலை அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் ராம்கி கூறிருப்பதாவது :

அப்போதெல்லாம் ஹீரோக்கள் பொது பிரச்சனைகள் தலையிட மாட்டார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், எந்த பிரச்சினையாக இருந்தாலும், முதலில் களத்தில் இறங்கி நிற்பவர் விஜயகாந்த். அவருக்கு அது குறித்த கூச்சமோ பயமோ இருக்காது.

நடிகர் சங்கத்தில் இருந்த அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து, கடன்களை அடைத்து அதனை ஒரு நேர்மையான பாதைக்கு கொண்டு வந்த பெருமை விஜயகாந்த்தையே சேரும். இத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்த விஜயகாந்தின் பெயரை நடிகர் சங்க கட்டிடத்துக்கு வைப்பது நன்றியாக இருக்கும் என நடிகர் ராம்கி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா - மும்பை அணிக்கு 170 ரன்கள் இலக்கு..!!

More in Cinema News

To Top