Connect with us

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: படைத்தலைவன் பிரஸ் ஷோவில் சண்முகபாண்டியன் வெளியிட்ட தகவல்..

Featured

விஜயகாந்த் மகனுக்கு விரைவில் திருமணம்: படைத்தலைவன் பிரஸ் ஷோவில் சண்முகபாண்டியன் வெளியிட்ட தகவல்..

மக்கள் செல்வன் கேப்டன் விஜயகாந்திற்கு விஜய பிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டுள்ளார். இளைய மகன் சண்முகபாண்டியன் சினிமாத்துறையில் தனது பயணத்தை தொடங்கி உள்ளார்.

சண்முகபாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் கடந்த 13 ஆம் தேதி திரைக்கு வந்தது. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் போது சண்முகபாண்டியன், படம் தொடர்பான விஷயங்களைப் பகிர்ந்ததோடு, தனது குடும்பத்தினரைக் குறித்தும் பேசினார். அப்போது தனது அண்ணன் விஜய பிரபாகரனின் திருமண குறித்த கேள்விக்கு பதிலளித்த சண்முகபாண்டியன், “எனக்கு அண்ணி விரைவில் வருவார். எனது அண்ணனுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். அதற்கான நேரம் வெகு சீக்கிரத்தில் வரும்,” என உறுதி செய்தார்.

விஜய பிரபாகரனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், கேப்டன் விஜயகாந்த்தின் உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்ததால் திருமணம் நடைபெறவில்லை என கூறப்பட்டது. தற்போது, குடும்பத்தில் மகிழ்ச்சியான மாற்றம் வரவிருப்பதாக சண்முகபாண்டியன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top