Connect with us

“அப்பா நன்றாக அடி போடுவார், அம்மா வேடிக்கைப் பார்ப்பாங்க!” – விஜய் சேதுபதியைப் பற்றி மகன் சூர்யாவின் ஓப்பன் பேட்டி..

Featured

“அப்பா நன்றாக அடி போடுவார், அம்மா வேடிக்கைப் பார்ப்பாங்க!” – விஜய் சேதுபதியைப் பற்றி மகன் சூர்யாவின் ஓப்பன் பேட்டி..

நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தற்போது ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். ஏற்கனவே, அவர் தன் தந்தையுடன் இணைந்து நடித்த சிந்துபாத் திரைப்படத்தில் குழந்தை வேடத்தில் நடித்திருந்தாலும், எதிர்பார்த்த அளவில் அந்த படம் அவருக்கு புகழ் தேடித் தரவில்லை.

தற்போது, அனல் அரசு இயக்கத்தில் பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ள சூர்யா, இப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஜூலை 4ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் என் மகளை ஒருபோதும் அடிக்க மாட்டேன். ஆனால் என் மகன் சூர்யாவை நன்றாக போட்டு அடித்துவிடுவேன்” என்று கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெற்றது.

இதற்கான பதிலாக, சூர்யா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், “அப்பா என்னை கராத்தே கிளாஸ், பாக்ஸிங் கிளாஸ் எல்லாத்துக்கும் போகச் சொல்வார். நான் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கிறேன். அப்போதுதான் அடி வாங்க நேரிடும். அதைக் கண்டு அம்மா கூட ‘நல்லா அடி வாங்கட்டும்’ என்று வேடிக்கை பார்க்கிறாங்க” என்று கூறி, ரசிகர்களை கிண்டலாக சிரிக்க வைத்துள்ளார். சூர்யாவின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரின் முதல் ஹீரோ படமான பீனிக்ஸ் வெற்றிபெற அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top