Connect with us

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரஜினி பட நடிகை!

Featured

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரஜினி பட நடிகை!

நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி… இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வசூலிலும் சரித்திரம் படைத்தது. தற்போது, விஜய் சேதுபதி பாண்டிராஜ் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டு இருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, தெலுங்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான பூரி ஜெகன்நாத் உடன் விஜய் சேதுபதி தற்போது கைகோர்த்திருக்கிறார். இந்த தகவல் சமீபத்தில் இணையத்தில் வெளியானது. இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் முதல் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தைப் பற்றிய ஒரு அதிரடி அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் பிரபல நடிகை ராதிகா ஆப்தே, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top