Connect with us

Super Deluxe எனக்கு ஒரு சிறந்த பாடம்..விஜய்சேதுபதி கருத்து!

Cinema News

Super Deluxe எனக்கு ஒரு சிறந்த பாடம்..விஜய்சேதுபதி கருத்து!

நடிகர் விஜய் சேதுபதி இப்போது பெரிய அளவில் நடிகராக இருந்து வருகின்றார்…புதுப்பேட்டை,நான் மகான் அல்ல,சுந்தர பாண்டியன் உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்து வந்த விஜய்சேதுபதி…அதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமான நிலையில் இப்போது 50 படங்களுக்கு மேல் விறுவிறுவென பல்வேறு மொழிகளில் நடித்து அசத்தி உள்ளார்…ஹீரோ வில்லன் என அனைத்தும் செய்து வருகின்றார் அவர்..

ரஜினிகாந்த்,கமல்ஹாசன்,விஜய்,ஷாருக்கான் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் வில்லனாக நடித்து வரும் விஜய்சேதுபதி ஹீரோவாகவும் தொடர்ந்து நடித்து இரண்டையுமே பேலன்ஸ் செய்து வருகிறார்…அதில் ஒரு சில தோல்வி இருந்தாலும் அவருக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகின்றது…

இதுபற்றி ஒரு பேட்டியில் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலாக அவர் சொல்லியது எனக்கு எதுவும் தெரியாதுன்னு எனக்கு தெரியும் ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பாக அதுதொடர்பாக சினிமாவில் உள்ள அறிவாளிகளுடன் அதுதொடர்பாக விவாதங்களை நடத்தி எனக்கு புரிந்து கொண்டதை நடித்து வருகிறேன் என்றார்..அதனை தவறாமல் செய்து வருவதே எனக்கு சிறப்பாக அமைந்து இருக்கின்றது..

இப்படி அணைத்து வகையிலும் நடிக்கிறீங்களே எப்படி என்கிற கேள்விக்கு பதிலளித்த விஜய்சேதுபதி நடிப்புக்கு எந்தவொரு பார்முலாவும் இல்லை..ஒரு கதாபாத்திரம் கொடுத்தால் அதற்கான சுதந்திரத்தை நமக்கு கொடுத்து விட்டாலே அதற்கேற்ப மனம் ட்யூன் ஆகி நடித்து விடும் என்றார்…இப்படி அழகாக தன்னுடைய தகவலை சொல்லி பேசி இருந்தார் விஜய் சேதுபதி..

Super Deluxe படத்தில் திருநங்கையாக நடித்து தேசிய விருது வென்ற விஜய்சேதுபதி அது எனக்கு ஒரு மாஸ்டர் கிளாஸ் என சொல்லி அதனை புகழ்ந்து பேசி இருக்கின்றார்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மஞ்சுமெல் பாய்ஸ்’ பட நடிகரை கரம் பிடித்தார் நடிகை அபர்னா தாஸ்..!!!

More in Cinema News

To Top