Connect with us

ரெட்ரோ நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு – விஜய் தேவரகொண்டா விளக்கம்!

Featured

ரெட்ரோ நிகழ்ச்சியில் சர்ச்சை பேச்சு – விஜய் தேவரகொண்டா விளக்கம்!

விஜய் தேவரகொண்டா நடிகராக அறிமுகம் ஆன படம் “நுவிலா”. அதன் பிறகு “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்”, “எவடே சுப்ரமணியம்”, “பெலி சூப்புலு”, “துவாரகா” போன்ற படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு நடிகராக பெரிய பெயர் கொடுத்த படம் “அர்ஜுன் ரெட்டி”. இந்த திரைப்படம் தான் விஜய்யை முன்னணி நடிகராக மாறவைத்தது.

கடந்த 10 ஆண்டுகளில், விஜய் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன், சூர்யா நடிப்பில் வெளியான “ரெட்ரோ” படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, விஜய் இந்தியா – பாகிஸ்தான் விவகாரம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார். “ரெட்ரோ நிகழ்வில் நான் கூறிய கருத்து மக்களிடையே கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு நான் மனமார்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். எந்த ஒரு உள்நோக்கமும், யாரையும் புண்படுத்தும் நோக்கத்திலும், எந்த சமூகத்தையும் குறி வைத்து நான் பேசவில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா – மருத்துவர்கள் அளித்த அப்டேட்!

More in Featured

To Top