Connect with us

அரசியலில் தீவிரமாக செயல்படும் விஜய் வாங்கிய புதிய கார் புகைப்படம்..

Featured

அரசியலில் தீவிரமாக செயல்படும் விஜய் வாங்கிய புதிய கார் புகைப்படம்..

நடிகர் விஜய் கடந்த வருடம், தனது 69வது படத்துக்குப் பிறகு முழுநேர அரசியல்வாதியாக களமிறங்குவதாக அறிவித்திருந்தார். அதன் பின்னர், “தமிழக வெற்றிக்கழகம்” என்ற கட்சி தொடங்கிய அவர், கட்சியின் கொடி மற்றும் கொள்கைகளை வெளியிட்டார். தற்போது, அவர் அரசியலில் ஈடுபட்டு முக்கிய பிரச்சினைகளை சந்திப்பதில் ஒன்றாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரந்தூர் பகுதியில் உள்ள சென்னையின் இரண்டாவது பசுமை வெளி விமான நிலையம் திட்டத்தைப் பற்றி மக்களிடம் பேசுகிறார்.

இந்த திட்டத்தை மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது, மேலும் விமான நிலையம் அமைக்க 5000 ஏக்கர் நிலம் தேவையாக இருப்பதாக மாநில அரசு தெரிவித்து, நிலத்தை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால், அந்த இடத்தில் நிலம் உரிமையாளர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர், இது 910வது நாளாகத் தொடர்கிறது.

இன்றைய தினம், விஜய் அந்த போராட்டக்காரர்களை சந்திக்க இருக்கிறார். அப்போது அவர் தனது புதிய காரில் பயணம் செய்துள்ளார். அந்த கார் பற்றிய புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மான்யா ஆனந்த் பேட்டி வைரல்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் மேனேஜர்

More in Featured

To Top