Connect with us

விஜய் மக்களை சந்திக்க தமிழ்நாடு முழுக்க பயணம் தொடங்கும் தேதி அறிவிப்பு..

Featured

விஜய் மக்களை சந்திக்க தமிழ்நாடு முழுக்க பயணம் தொடங்கும் தேதி அறிவிப்பு..

நடிகர் விஜய், சினிமாவை தாண்டி தற்போது அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி, 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள அவர், இதன் மூலம் அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். ஆனால், கட்சி தொடங்கியதோடு மக்களை நேரில் சந்திக்கவில்லை என்பது குறித்த விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, புயல் நிவாரணத்துக்காக மக்களை நேரில் சந்திக்காமல், அவர்களை ஆபீசுக்கு வரச் சொல்லி உதவியதை எதிர்த்து, “ஒர்க் ப்ரம் ஹோம் அரசியல் செய்கிறாரா விஜய்?” என நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்தனர்.

இந்த நிலையில், விஜயின் கட்சியில் பொறுப்பில் இருக்கும் நடிகர் தாடி பாலாஜி, ஒரு சமீபத்திய பேட்டியில், விஜய் அடுத்த மாதம், ஜனவரி 27ஆம் தேதி முதல் மக்களை நேரில் சந்திக்கப் போவதாக தெரிவித்துள்ளார். விஜய் தனது சுற்றுப்பயணத்தின் மூலம் மக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, தன் அரசியல் நோக்கங்களை பகிர்ந்து கொள்வதாக அந்த பேட்டி குறிப்பிட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top