Connect with us

“விஜய் குமாரின் ‘Fight Club’ படத்தின் Censor தகவல் வெளியானது!”

Cinema News

“விஜய் குமாரின் ‘Fight Club’ படத்தின் Censor தகவல் வெளியானது!”

பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் தயாரிப்பு திரைப்படம் ‘ஃபைட் கிளப்’ வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

‘ஃபைட் கிளப்’ படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு ‘A’ சான்றிதழ் அளித்துள்ளனர். வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால் இந்த படத்திற்கு ‘A’ சான்றிதழ் கிடைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

‘A’ சான்றிதழ் பெற்றுள்ளதால் இந்த படத்தை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் பார்க்க முடியாத பலமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 137 நிமிடங்கள் என்றும் அதாவது 2 மணி நேரம் 17 நிமிடங்கள் என்றும் சென்சார் சான்றிதழில் இருந்து தெரிய வருகிறது.

‘உறியடி’ விஜயகுமார், கார்த்திகேயன் சந்தானம், சங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். அப்பாஸ் ரஹ்மத் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top