Connect with us

இதற்காகதான் கொடைக்கானல் போகிறேன்!” – ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த விஜய்..

Featured

இதற்காகதான் கொடைக்கானல் போகிறேன்!” – ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த விஜய்..

நடிகர் விஜய் தற்போது சினிமாவும் அரசியலும் என இரண்டையும் கவனித்து வருகிறார். சமீபத்தில் கோவைக்கு சென்ற விஜயைப் பார்ப்பதற்காக பெரிய அளவில் ரசிகர்கள் திரண்டனர். அவர் ரோட்டில் செல்லும்போது, சிலர் அவரது வண்டியின் மீது ஏறியதுடன், காரை பின்தொடர்ந்து பைக்கில் வேகமாக சென்றனர்.

அப்போது சில ரசிகர்கள் தடுமாறி விழுந்த சம்பவங்களும், அதற்கான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில், இன்று விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு சென்றார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார், “நான் இன்று ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங்கிற்காக கொடைக்கானல் செல்கிறேன். வேறொரு தருணத்தில் கட்சி சார்பாக மதுரையில் உங்களை சந்திக்கிறேன்.”

அதையும் தொடர்ந்து, “நான் இப்போது விமானத்தில் இருந்து இறங்கி உங்களை பார்த்துவிட்டு வேலைக்காக கிளம்புகிறேன். நீங்களும் பாதுகாப்பாக கிளம்புங்கள்.” என்றார். மேலும், ரசிகர்களுக்கு விழிப்புணர்வாக கூறினார், “யாரும் என் காரை பின்தொடர வேண்டாம். நின்றுகொண்டு பைக் ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் ஓட்டுவது போன்ற விஷயங்களை செய்யாதீர்கள். அந்தக் காட்சிகளைப் பார்ப்பதே மனதுக்கு பதற்றமாக இருக்கிறது. விரைவில் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்.” விஜயின் இந்த உரையாடல் ரசிகர்களிடம் தற்போது வேகமாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிம்புவுக்கான ஸ்கிரிப்ட் ரஜினிக்கா? தலைவர் 173 பற்றி வைரல் ஆன தகவல்!

More in Featured

To Top