Connect with us

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட விநியோக உரிமை: அவர் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?

Featured

விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட விநியோக உரிமை: அவர் எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜனநாயகன்’. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

படத்தின் OTT உரிமையை அமேசான் பிரைம் பெற்றுள்ளது. அதேபோல், தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படக்குழு இதர விநியோக உரிமைகள் வியாபாரம் தொடங்க திட்டமிட்டுள்ளது. தற்போது, விஜய்யின் தயாரிப்பு நிறுவனம் சில நிபந்தனைகளை முன்வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது, ‘ஜனநாயகன்’ விநியோக உரிமையை கைப்பற்றும் எந்தவொரு நிறுவனத்துக்கும் அரசியல் பின்புலம் இருக்க கூடாது என்பது முக்கிய நிபந்தனை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, தமிழக உரிமையை லலித்குமாரிடம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் பின்புலம் கொண்ட நிறுவனம் இருந்தால், அதற்குப் பதிலாக தாணுவிடம் உரிமையை வழங்க தயாராக இருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top