Connect with us

புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய சந்தானம் – சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!

Featured

புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறிய சந்தானம் – சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்!

சந்தானம், தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக நீண்ட காலமாக வலம் வந்தவர். எந்த ஒரு புதிய திரைப்படமாக இருந்தாலும் சந்தானம் இல்லாமல் இருப்பது அரிதாக இருந்தது. அவர் நடித்தாலே அந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உறுதியுடன் எதிர்பார்த்து வந்தனர்.

இந்நிலையில், வேறு ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடிப்பதைவிட, தனக்கே உரிய கதைகளில் ஹீரோவாக நடித்து வருவதில் ஆர்வம் காட்டியுள்ளார். அதற்காக பல முயற்சிகளும் செய்துவருகிறார். சமீபத்தில் அவர் நடித்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” என்ற திரைப்படம் வெளியானது. ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்வியைச் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமையிலும், நடிகர் சந்தானம் தனக்கென புதிய வீடு ஒன்றை கட்டி முடித்துள்ளார். அந்த வீட்டில் பால் காய்ச்சி புதிய வீட்டிற்குள் குடியேறியுள்ளார். அவரின் குடியேறும் நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top