Connect with us

விஜய் தேவரகொண்டா கூறியது: கடந்த காலத்திற்கு சென்றால், அவர்களை அறைவேன்..

Featured

விஜய் தேவரகொண்டா கூறியது: கடந்த காலத்திற்கு சென்றால், அவர்களை அறைவேன்..

நவிலா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதன் பின், “லைஃப் இஸ் பியூட்டிஃபுல்”, “எவடே சுப்ரமணியம்”, “பெலி சூப்புலு”, “துவாரகா” என பல படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு நடிகர் என்ற அந்தஸ்தை கொடுத்த படம் “அர்ஜுன் ரெட்டி”. இந்த படம் வெளியாகும் முன், அவ்வளவாக பிரபலமாதல் Vijay Deverakonda இந்த படத்திற்குப் பிறகு முன்னணி நடிகராக நிலைபெற்றார். கடந்த 10 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜய், அதில் பாதி படங்களால் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார்.

தற்போது, அவரது நடிப்பில் “ஃபேமிலி ஸ்டார்” திரைப்படம் வெளியானது. இவர் தற்போது “கிங்டம்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 30-ம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” படத்தின் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டார். அப்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவரிடம், “கடந்த காலத்திற்கு சென்று யாரையாவது சந்திக்க விரும்புகிறீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு, விஜய் தேவரகொண்டா பதிலளித்து கூறினா, “நான் ஆங்கிலேயர்களை சந்திக்க விரும்புகிறேன். அவர்களை சந்தித்து இரண்டு அறைகள் கொடுப்பேன். அதேபோல் ஔரங்கசீப்பிற்கும் இரண்டு மூன்று அறைகள் கொடுக்க ஆசை உள்ளது. தற்போது இது தான் எனக்கு நியாபகம் வருகிறது” என்று சொல்லி அவரின் கருத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘ப்ரோ கோட்’ தலைப்பு வழக்கு: கோர்ட் அதிரடி உத்தரவு

More in Featured

To Top