Connect with us

5 நாட்களில் ‘கேங்கர்ஸ்’ படத்தின் வசூல்: எவ்வளவு தெரியுமா?

Featured

5 நாட்களில் ‘கேங்கர்ஸ்’ படத்தின் வசூல்: எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் வடிவேலு. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் “கேங்கர்ஸ்”. இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளார்.

மேலும் கேத்ரின் தெரசா, முனீஸ்காந்த், மைம் கோபி, பகவதி, வாணி போஜன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. “வின்டேஜ் வடிவேலு இஸ் பேக்” என பலரும் கூறி வருகின்றனர்.

“வின்னர்”, “தலைநகரம்”, “நகரம் மறுபக்கம்” படங்களின் வெற்றிக்குப் பிறகு, கேங்கர்ஸ் படத்திலும் சுந்தர் சி – வடிவேலு கம்போ சிறப்பாக உள்ளது என ரசிகர்கள் விமர்சனம் செய்கிறார்கள். இந்த நிலையில், 5 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 9.5 கோடி வசூல் செய்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top