Connect with us

ROMEO: வைரலாகிவரும் விஜய் ஆண்டனியின் அடுத்த பட Poster! படம் எப்போது Release தெரியுமா?!

Cinema News

ROMEO: வைரலாகிவரும் விஜய் ஆண்டனியின் அடுத்த பட Poster! படம் எப்போது Release தெரியுமா?!

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பிச்சைக்காரன் 2’, ‘கொலை’ படங்களைத் தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

‘ரோமியோ’ (Romeo) என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் நாயகியாக மிருணாளினி ரவி நடிக்கிறார். படத்தை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். யூடியூப்பில் ‘காதல் டிஸ்டன்ஸிங்’ என்ற தொடரை இயக்கிய இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் படத்தை இயக்குகிறார்.

பரத் தனசேகர் இசையமைக்கும் படத்தின் படப்பிடிப்பு மலேசியா, பாங்காக், ஹைதராபாத், பெங்களூர், தென்காசி மற்றும் மகாபலிபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகிறது.

ரொமான்டிக் காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்துக்கான போஸ்டரில் விஜய் ஆண்டனி அப்பாவியாக அமர்ந்திருக்க, மனைவி மிருணாளினி மதுவை கோப்பையில் ஊற்றும் வகையிலான போஸ்டர் கவனம் பெற்றுள்ளது. படம் கோடையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவிப்பு..!!

More in Cinema News

To Top