Connect with us

Ban செய்யப்பட்ட சின்மயிக்கு வாய்ப்பு கொடுப்பேன்” – பிரபல இசையமைப்பாளர் அறிவிப்பு..

Featured

Ban செய்யப்பட்ட சின்மயிக்கு வாய்ப்பு கொடுப்பேன்” – பிரபல இசையமைப்பாளர் அறிவிப்பு..

தமிழ் சினிமா ரசிகர்கள் திரைப்படங்களை மட்டுமல்லாமல், அதில் வரும் பாடல்களையும் மிகுந்த உற்சாகத்துடன் ரசித்து வருகிறார்கள். இதனை மையமாகக் கொண்டு, தற்போது படங்களில் ஒரு பாடலின் சிறிய பிட்டை மட்டும் மாஸ் நடனத்துடன் அமைத்து, அதை புரொமோஷனுக்காக பயன்படுத்தும் நிலை அதிகரித்துள்ளது.

இதே போக்கில் சமீபத்தில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பின்னணிப் பாடகி சின்மயி பாடிய பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. யூடியூபிலும் டிரெண்டிங்கில் இடம்பெற்று ரசிகர்களிடையே பெரும் கவனம் பெற்றது. இந்த பாடலை சின்மயி பாடியதை கேட்டதும், பல ரசிகர்கள், “இவர் தடைசெய்யப்பட்ட நிலையில் இருக்கிறாரே?” என்ற ஆச்சரியத்துடன், மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதை எதிர்க்கும் கருத்துக்களையும் வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான விஜய் ஆண்டனி, எதிர்வரும் தனது இசைப்பணிகளில் சின்மயிக்கு பாட வாய்ப்பு வழங்கப் போவதாக தெரிவித்துள்ளார். ஒரு சமீபத்திய பேட்டியில் அவர், “நான் விரைவில் சில படங்களுக்கு இசையமைக்க உள்ளேன். அதில் சின்மயி கண்டிப்பாக பாடுவார்” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே விஜய் ஆண்டனியின் இசையமைப்பில் சின்மயி பல பாடல்களை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Thalaivar 173 அப்டேட் – ஏப்ரல் ஷூட்டிங் குறித்து சிபி சக்ரவர்த்தி கூறியது

More in Featured

To Top