Connect with us

ஹீரோவாகும் பிக் பாஸ் ராஜு… அஜித், விஜய் பட இயக்குனருடன் கூட்டணி..

Featured

ஹீரோவாகும் பிக் பாஸ் ராஜு… அஜித், விஜய் பட இயக்குனருடன் கூட்டணி..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனம் பெற்றவர் ராஜு. அந்த நிகழ்ச்சிக்கு முன் சில சீரியல்களில் நடித்த Raju, பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, பரவலான ரசிகர்கள் ஆதரவை பெற்றார்

பிக் பாஸ் முடிந்த பிறகு, சிவகார்த்திகேயனின் ‘டான்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்திருந்தார். தற்போது விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ராஜு தற்போது ஹீரோவாக ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை இயக்கிய ஹெச். வினோத் தயாரிக்க உள்ள குறைந்த பட்ஜெட் படம்தான் இது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த படத்தை ‘குற்றம் கடிதல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரம்மா இயக்கவிருக்கிறார். இது ராஜுவின் முதல் ஹீரோ என்ட்ரியாக இருப்பதால், அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top