Connect with us

பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு பல கோடி! ‘Dude’ OTT உரிமையை வாங்கியது எந்த நிறுவனம் தெரியுமா?

Featured

பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு பல கோடி! ‘Dude’ OTT உரிமையை வாங்கியது எந்த நிறுவனம் தெரியுமா?

தற்போது தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் பிரதீப் ரங்கநாதன். இவர் நடித்த ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ ஆகிய இரு படங்களுமே உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து பெரிய வெற்றியை பெற்றன.

‘டிராகன்’ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, தற்போது பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் அடுத்த படம் ‘Dude’. இந்த படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. படத்தை சுதா கொங்கராவின் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். இந்த படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார். மேலும், முன்னணி நடிகரான சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் தீபாவளி சிறப்பு வெளியீடாக திரைக்கு வர உள்ளது.

படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில், ‘Dude’ திரைப்படத்தின் டிஜிட்டல் (OTT) உரிமையை ஒரு முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், ரூ.25 கோடி என்பது போன்ற பெரிய தொகைக்கு இந்த உரிமையை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, பிரதீப் ரங்கநாதன் நடித்த படங்களில் அதிக விலைக்கு விற்பனை ஆன OTT படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படம் ‘டிராகன்’ படத்தை விட கூடுதல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top