Connect with us

வெளிநாட்டில் வசூலை வாரிக்குவிக்கும் விடாமுயற்சி – இதுவரை எவ்வளவு தெரியுமா?

Featured

வெளிநாட்டில் வசூலை வாரிக்குவிக்கும் விடாமுயற்சி – இதுவரை எவ்வளவு தெரியுமா?

2025 ஆம் ஆண்டு தமிழ்சினிமாவுக்கு மாபெரும் வசூல் வெற்றியைத் தரக்கூடிய படம் விடாமுயற்சி என்பது உறுதி ஆகின்றது. அஜித் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் பொங்கல் பண்டிகையுடன் வெளிவருகிறது.

மகிழ் திருமேனி இயக்கியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் வரும் பொங்கலுக்கு முன்னதாக, அதன் வெளியீடு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்திலிருந்து வெளியான “சாவடிகா” பாடல் நேற்று யூடியூப்பில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இதுவரை வெளிநாட்டில் விடாமுயற்சி படத்தின் ப்ரீ புக்கிங் துவங்கியுள்ளது, மற்றும் ப்ரீ புக்கிங்கில் இப்போது வரை ரூ. 22 லட்சம் வசூல் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது, அஜித்தின் படத்திற்கு வெளிநாட்டில் கிடைத்த சிறந்த ஓப்பனிங் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை கொண்டு, படம் முதல் நாளிலேயே மாபெரும் வசூல் திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top