Connect with us

கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு

Featured

கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் மீட்பு

இமாச்சலில் சட்லெஜ் நதியில் கார் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இயக்குநர் வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது.

சென்னை முன்னாள் மேயராகவும் சைதாப்பேட்டை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர் சைதை துரைசாமி. இவரது மகன் வெற்றி. 45 வயதாகும் இவர் பிரபல சினிமா இயக்குநர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்று ‘என்றாவது ஒருநாள்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், வெற்றி துறைசாமி கடந்த சில நாட்களுக்கு முன் இமாச்சல் பிரதேசத்திற்கு படத்திற்காக லொக்கேஷன் பார்க்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

கார் ஒன்றை வாடகைக்கு எடுத்த வெற்றி துரைசாமியின் குழு லாஹல் மற்றும் ஸ்பிதியின் காசா பகுதியிலிருந்து சிம்லாவுக்கு சென்று கொண்டிருந்தனர். காரை உள்ளூரை சேர்ந்த தஞ்சின் என்ற ஓட்டுனர் தான் ஓட்டிச் சென்றுள்ளார்.

கின்னார் மாவட்டம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சட்லஜ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது .

இந்த கோர விபத்தில் காரை ஓட்டிய தன்ஜின் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வெற்றியின் நண்பர் கோபிநாத் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஆனால் வெற்றி துரைசாமி மாயமானார்

இதையடுத்து மாயமான வெற்றி துரைசாமியை கடந்த 8 நாட்களாக தீவிரமாக தேடப்பட்டு வந்து நிலையில் அவரது உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது .

விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் ஆற்றில் அவரது உடல் கிடைத்துள்ளது. வெற்றி துரைசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அவரது குடுமபத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜேசன் சஞ்சய் விமான நிலையத்தில் காட்டிய செயலால் ரசிகர்கள் பரபரப்பு!

More in Featured

To Top