Connect with us

விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் படத்தை இயக்கம் வெங்கட் பிரபு?

Venkat_Prabhu_Sivakarthikeyan

Cinema News

விஜய்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் படத்தை இயக்கம் வெங்கட் பிரபு?

விஜயை வைத்து தற்போது மல்டி ஸ்டார் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்தியேன் தற்போது கமலஹாசனின் படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். ராஜ்குமார் பெரியசாமி எனும் இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படம் முடிந்த பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ரஜினிகாந்தின் 171வது படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் சிவகார்த்திகேயன் இடம் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, ஏஜிஎஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஏஜிஎஸ்-வெங்கட் பிரபு காம்போவில் விஜய் நடிக்கும் படம் தயாராகி வருகிறது.

இதனால், வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் இணையும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் என தற்போது புது தகவல் கசிந்துள்ளது. இதற்கிடையே டான் படத்தை கொடுத்த சிபி சக்ரவர்த்தியின் படம் ஒன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது.

சிவகார்த்திகேயனை முன்வைத்து கோலிவுட்டில் இத்தனை விதமான தகவல்கள் பரவி வந்தாலும், சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமியின் படத்தை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது மட்டுமே அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதர படங்கள் அனைத்தும் சூழ்நிலையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top