Connect with us

வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று கதை…உண்மை சம்பவங்களுடன் வந்த ட்ரைலர்!

Cinema News

வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று கதை…உண்மை சம்பவங்களுடன் வந்த ட்ரைலர்!

தமிழில் சீரிஸ் இப்போது அதிகமாக வந்து கொண்டு இருக்கின்றது..அதாவது ZEE5 தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான கூச முனிசாமி வீரப்பன் என்ற டாக்குமெண்ட்ரி சீரிஸின் டிரெய்லரை இன்று வெளியிட்டது..இந்த சீரிஸ் உண்மை சம்பவங்களை சொல்லும் ஒன்றாகும்…

இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை வழங்குகிறது…இது நிச்சயம் மனதை தொடும் திடுக்கிட வைக்கும் ஒன்றாக இருக்கும் என தெரிகின்றது..

நிஜ வாழ்க்கைக் காட்சிகள் மற்றும் அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம் இந்த சீரிஸ் வீரப்பனின் புதிரான ஆளுமை மற்றும் அவரது குற்ற பின்னணியைத் தெளிவாகச் சொல்கிறது இந்த கதைக்களம்.

இந்த சீரிஸின் தனிச்சிறப்பு இருக்கு அது என்னவென்றால் இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில் அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது…அது மட்டுமல்லாது அவரைச் சுற்றி நடந்த பல நிகழ்வுகள் பற்றிய அறியப்படாத உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

Orginal தமிழ் சீரிஸான ​​’கூச முனிசாமி வீரப்பன்’ டிசம்பர் 8 முதல் தமிழ், கன்னடம், இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது…அதனால் நிறைய பேசப்படும் சீரிஸாகவும் அதிகம் உண்மை உள்ளதாக இருக்கும் என சொல்லப்பட்டு வளர்கின்றது…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  KGF புகழ் யஷ் முதல் கேரளத்து க்ளாஸிக் நாயகன் ஃபஹத் வரை : பிரபலங்கள் வாக்களித்த வைரல் போட்டோஸ்..!!!

More in Cinema News

To Top