Connect with us

வரதட்சணை வாங்கி திருமணம் செய்த ரம்யா பாண்டியன்: இதென்ன புதுசா இருக்கே..

Featured

வரதட்சணை வாங்கி திருமணம் செய்த ரம்யா பாண்டியன்: இதென்ன புதுசா இருக்கே..

தமிழில் டம்மி பட்டாசு, ஜோக்கர், ஆண் தேவரை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன். அவர் பிரபலம் அடைந்தாலும், பெரிய அளவில் ரசிகர்களிடமிருந்து வரவேற்பு பெற்றது மொட்டை மாடியில் எடுத்த சிம்பிள் போட்டோ ஷுட் தான்.

அதன்பின், குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மேலும் பரிச்சயமாகி வந்தார். படங்கள், போட்டோ ஷுட்கள் என பிஸியாக இருக்கும் ரம்யா பாண்டியனுக்கு அண்மையில் லவல் தவான் என்றவருடன் திருமணம் நடந்தது.

இவரது திருமணம் குறித்து சமீபத்தில் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதாவது, லவல் தவான் பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர்களின் வழக்கப்படி, பெண்கள் வீட்டில் வரதட்சணை வாங்க மாட்டார்கள். திருமணம் செய்யும் மாப்பிள்ளை தான் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது.

இதனால், ரம்யா பாண்டியனின் கணவர் பெரும் தொகையை வரதட்சணையாக கொடுத்து, நடிகையை திருமணம் செய்துள்ளார்.

இந்த தகவலை ரம்யாவின் அம்மா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதை கேட்டு, சில ரசிகர்கள் “இதென்ன புதுசா?” என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top