Connect with us

“வித்தியாசமான கதைக்களத்தில் வைபவ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஆலம்பனா’ படத்தின் Trailer வெளியாகி வைரலாகிவருகிறது!”

Cinema News

“வித்தியாசமான கதைக்களத்தில் வைபவ் நடிப்பில் வெளியாகவுள்ள ‘ஆலம்பனா’ படத்தின் Trailer வெளியாகி வைரலாகிவருகிறது!”

வைபவ் நடித்த ‘ஆலம்பனா’ என்ற திரைப்படம் வரும் 15ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வைபவ் பிறந்த உடனே அவருடைய அப்பாவின் சொத்துக்கள் எல்லாம் பறிபோய் விடுகிறது. அந்த அளவுக்கு ராசியில்லாத மகனாக இருந்த அவர் வளர்ந்து பெரியவனானவுடன் திடீரென அலாவுதீனின் அற்புத விளக்கின் பூதம் தோன்றி அவர் கேட்டதை எல்லாம் அள்ளித் தருகிறது.

அதனால் ஏற்படும் பிரச்சனைகள், அந்த பிரச்சனையை சந்திக்கும் விதத்தை நகைச்சுவையுடன் கூறி இருக்கும் படம் தான் ‘ஆலம்பனா’. பாரி கே விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வைபவ், பார்வதி, முனீஸ்காந்த், யோகி பாபு, ஆனந்தராஜ், ரோபோ சங்கர், திண்டுக்கல் லியோனி, பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில், வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

KJR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்த படம் டிசம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு புரமோஷன் பணியை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் ஜெட்லீ மைதானத்தில் ஜெயிக்கப்போவது யார்..? - பரபரப்பான கட்டத்தில் டெல்லி - லக்னோ இன்று மோதல்..!!

More in Cinema News

To Top