Connect with us

செய்தியாளர்களை சந்திக்கும் நடிகர் விஜயின் அம்மா ஷோபனா.. காரணம் என்ன?

Vijay-with-mother-Shobana

Cinema News

செய்தியாளர்களை சந்திக்கும் நடிகர் விஜயின் அம்மா ஷோபனா.. காரணம் என்ன?

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜயின் தாயார் ஷோபனா இன்று மாலை பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உள்ள நடிகர் விஜய், விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வந்தார். இந்த அமைப்பு மூலம் மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வந்தன

இந்நிலையில், பிப்ரவரி தொடக்கத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்குவதாக விஜய் அறிவித்தார். எனினும் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியில்லை என்றும், 2026 சட்டசபை தேர்தலே இலக்கு என்றும் அறிவித்துவிட்டார்.

இதற்கிடையே, கட்சி தொடங்கி இரண்டு வாரங்களாகியும் இன்னும் செய்தியாளர் சந்திப்பை கூட அவர் நடக்கவில்லையே என பலரும் விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், அவரது அம்மா ஷோபனா இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் என்ன பேச உள்ளார் என்பது குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், அவர் விஜயின் அரசியல் வருகை குறித்தே பேச உள்ளார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'வேட்டையன்' படத்தில் தனது பகுதியை நிறைவு செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..!!

More in Cinema News

To Top