Connect with us

குட் பேட் அக்லி படத்துக்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Featured

குட் பேட் அக்லி படத்துக்காக த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் த்ரிஷா நடித்த புதிய திரைப்படம் குட் பேட் அக்லி, இன்று வெளியானது.

விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு, மீண்டும் நடிகர் அஜித்துடன் த்ரிஷா இணைந்துள்ளார். இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். இசை அமைத்தவர் ஜி.வி. பிரகாஷ்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இன்று வெளியான இந்த படம், சிறப்பு காட்சியில் பார்த்த ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் அஜித் ரூ. 163 கோடி சம்பளம் பெற்றதாக ஏற்கனவே தகவல் வந்தது.

இப்போது, த்ரிஷா பெற்ற சம்பள விவரமும் வெளியாகியுள்ளது. குட் பேட் அக்லி படத்துக்காக நடிகை த்ரிஷா ரூ. 4 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை? சீமான் கருத்து பரபரப்பு

More in Featured

To Top