Connect with us

ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

Featured

ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகை கொடுக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு ருபாய் 1000 ஊக்கத்தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

தைத்திருநாளாம் பொங்கல் திருநாளை, விமரிசையாகக் கொண்டாடும் வகையில், நம் தமிழக மக்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இனிதே தொடங்கியுள்ளது. வரும் நாட்களில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளன.

2021 தேர்தலின்போது, 511 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக, அவற்றில் ஒன்றைக் கூட இதுவரை முறையாகச் செயல்படுத்தவில்லை.

குறிப்பாக, தேர்தல் வாக்குறுதி எண் 373ல், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்ப்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறிய திமுக, அந்த வாக்குறுதியை முற்றிலுமாக மறந்து விட்டது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, தற்போது மூன்றாவது முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கவிருக்கின்றன. ஆனால், திமுக, ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு வழங்குவதாகக் கூறிய ஊக்கத்தொகை ரூ.1,000 குறித்துப் பேசுவதே இல்லை.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி போலி வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற முடியும் என்று திமுக நினைத்துக் கொண்டிருக்கிறது? தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு மாடுகள் வளர்ப்பவர்களுக்கு ருபாய் 1000 ஊக்கத்தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் என அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது..!!

More in Featured

To Top