Connect with us

71வது பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் – ட்ரெண்டிங் ஹாஸ்டாக்குடன் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்..!!

Cinema News

71வது பிறந்தநாள் கொண்டாடும் தமிழக முதல்வர் – ட்ரெண்டிங் ஹாஸ்டாக்குடன் வாழ்த்து சொன்ன பிரபலங்கள்..!!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்.

இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நேரிலும்,தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் திரை பிரபலங்கள் ட்ரெண்டிங் ஹாஸ்டாக் முதல்வர் ஸ்டாலினுக்கு அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

சமூகநீதி, மகளிர் மேம்பாடு, இளைஞர் நலம், தொழில் வளர்ச்சி என தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் செலுத்தி வரும் எனது அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர், மு.க.ஸ்டாலின் அவர்கள் நீடூழி வாழ அவரது பிறந்தநாளில் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புதிதாக அரசியல் களம் புகுந்துள்ள நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வெளியிட்டியுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top