Connect with us

அப்படியே Copy அடித்த கமல்ஹாசன்…கலாய்த்து வரும் நெட்டிசன்கள்!

Cinema News

அப்படியே Copy அடித்த கமல்ஹாசன்…கலாய்த்து வரும் நெட்டிசன்கள்!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘Thug Life’ படத்தின் அறிமுக வீடியோ ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்டதாக மீம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது…அது பலராலும் அதிகம் பேசப்பட்டு வருகின்றது..

கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ‘Thug Life’ படத்தின் அறிமுக வீடியோ நவம்பர் – 6 வெளியானது….

மணிரத்னம் இயக்கும் இப்படத்தில் கமல்ஹாசன், ஜெயம்ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்…இன்னும் பலர் இருப்பதாகவும் பேசப்படுகின்றது…

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க உள்ள நிலையில், அறிமுக வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது…அவை ட்ரெண்டும் ஆகியது…

இந்த நிலையில் இந்த அறிமுக வீடியோ 2019ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ஸ்டார் வார்ஸ் ரைஸ் ஆஃப் தி ஸ்கைவாக்கர் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக மீம் ஒன்று வைரலானது…அதை பலரும் ஒப்பிட்டு கமலை விமர்சித்து வருகின்றனர்…இப்படி அட்லீ பண்ணியிருந்தா மட்டும் இல்ல யார் பண்ணினாலும் தப்பு தான்…

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இணையத்தை கலக்கும் நடிகர் சந்தானத்தின் ‘இங்க நான் தான் கிங்கு’ படத்தின் ட்ரெய்லர்..!!

More in Cinema News

To Top