Connect with us

பஞ்சாப் அணியிடம் இதனால் தான் தோற்றோம் – அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கிய CSK கேப்டன் ருதுராஜ்..!!

Featured

பஞ்சாப் அணியிடம் இதனால் தான் தோற்றோம் – அடுக்கடுக்கான காரணங்களை அடுக்கிய CSK கேப்டன் ருதுராஜ்..!!

சிறப்பாக நடைபெற்று வரும் IPL கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்விக்கான காரணம் குறித்து கேப்டன் ருதுராஜ் பேசியுள்ளது செம வைரலாகி வருகிறது.

சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று CSK – PBKS அணிகள் பலப்பரீட்சை நடத்தியது .

இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் முதலில் பந்துவீச முடிவு செய்தார் .

இதையடுத்து பஞ்சாப் அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரகானே மற்றும் கேப்டன் ருதுராஜ் களமிறங்கினர்.

ஆரம்பம் முதல் சென்னை அணியின் பேட்டிங்கில் தடுமாற்றம் இருந்த நிலையில் கேப்டன் ருதுராஜ் மட்டும் தனி ஆளாக ரன் குவிப்பில் ஈடுபட்டிருந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 162 ரன்கள் எடுத்து. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது பஞ்சாப் அணி விளையாடியது.

ஆரம்பம் முதல் அதிரடி காட்டிய பஞ்சாப் அணி 18 ஆவது 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இலக்கை கடந்து அபாரமான வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து மனம் திறந்து பேசியுள்ள கேப்டன் ருதுராஜ் கூறியதாவது :

டாஸ் -ஐ வெற்றி பெறுவது எப்படி என நான் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். பயிற்சியின்போது நான் டாஸில் வெற்றி பெற்றாலும், களத்தில் மீண்டும் மீண்டும் தோற்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும் டாஸ் போடுவதற்காக களத்திற்கு வரும் போதெல்லாம் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகிறேன்.

“பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் நாங்கள் பேட்டிங் செய்யும் போது ஆடுகளம் மிகவும் கடினமாக இருந்தது. ஒருவேளை நாங்கள் 200 ரன்களுக்கு மேல் எடுத்து இருந்தால் போட்டி இன்னும் கடுமையாக இருந்திருக்கும்.

சேஸிங்கின் முதல் ஓவரிலேயே காயம் காரணமாக தீபக் சாஹர் வெளியேறி விட்டதால் 2 பவுலர்களுடன் போராட வேண்டியிருந்தது. அதுமட்டுமின்றி பனியின் தாக்கமும் அதிகமாக இருந்தது. மீதமுள்ள 4 போட்டிகளிலும் சிறப்பாக ஆடி வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிப்போம் என ருதுராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இனி வென்றாலும் வீழ்ந்தாலும் பலனில்லை - தொடரில் இருந்து வெளியேறியது லக்னோ - டெல்லி அணிகள்..!!

More in Featured

To Top