Connect with us

எப்பா ஏய் எல்லாரும் வீட்லயே இருங்கப்பா : தமிழ்நாட்டில் நாளை முதல் 5ம் தேதி வரை ஆரஞ்சு அலெர்ட்..!!

Featured

எப்பா ஏய் எல்லாரும் வீட்லயே இருங்கப்பா : தமிழ்நாட்டில் நாளை முதல் 5ம் தேதி வரை ஆரஞ்சு அலெர்ட்..!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாக புயலின் காரணமாக தமிழ்நாட்டுக்கு நாளை வரும் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில் :

வங்க கடலில் உருவாக ‘மிக்ஜாம்’ புயலால் தற்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வருகிறது வருகிறது இந்த புயல் சென்னை மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயலின் தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு நாளை முதல் வரும் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .வரும் 3 மற்றும் 4ம் தேதிகளில் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது

சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் தஞ்சாவூர், அரியலூர், மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Dulquer Salmaan’s KAANTHA 🎬 December 12 முதல் OTT-யில்!”

More in Featured

To Top