Connect with us

சார் படத்தின் புதிய ட்ரைலர் வெளியானது..!!

Cinema News

சார் படத்தின் புதிய ட்ரைலர் வெளியானது..!!

கிராமிய நாயகன் விமல் நடிப்பில் உருவாகி உள்ள ‘சார்’ படத்தின் புதிய ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் கிராமத்து பின்னணி கொண்டு கதைகளில் நடித்து கிராமிய நாயகனாக வலம் வருபவர் நடிகர் விமல். தொடக்கத்தில் சின்ன சின்ன காதாபாத்திரங்களில் நடித்து கதையின் நாயகனாக வளர்ந்த விமல் இன்று திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் விமலின் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படமே சார். போஸ் இயக்கியுள்ள இப்படத்தில் விமலுடன் சேர்ந்து பல முன்னனி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது இப்படத்தின் புதிய ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

சாதிய ஒடுக்குமுறை, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட கருத்துகளை படம் வலுவாக பேசுவது போல் ட்ரைலரில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் படமும் அப்படியே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top