Connect with us

இந்த வாட்டி “ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..” வெளியானது பிக் பாஸ் 8ன் புதிய ப்ரோமோ..!!

Cinema News

இந்த வாட்டி “ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..” வெளியானது பிக் பாஸ் 8ன் புதிய ப்ரோமோ..!!

உலககெங்கும் இருக்கும் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் புதிய சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க இருக்கும் நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.

பிரபல தனியார் பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ் .

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி பட்டி தொட்டி எங்கும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது . இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பேச்சை கேட்கவே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது .

இந்நிலையில் தொடர்ந்து 7 சீசன்களை வெற்றிகரமாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் அடுத்து வர இருக்கும் சீசனில் இருந்து விலகுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டார்.

இதையடுத்து அனைவரும் எதிர்பார்த்தபடி இந்நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளார் . இதற்கான அறிமுக ப்ரோமோவும் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது .

இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியின் அடுத்த புதிய ப்ரோமோ வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

ப்ரோமோவில் நம்ப மக்கள் செல்வன் ஊர் முழுக்க பயணித்து பலரிடமும் கருத்து கேட்பது போல காட்டப்பட்டு இருக்கிறது.

மக்கள் பலரும் பல்வேறு அறிவுரைகளை விஜய் சேதுபதிக்கு சொல்ல இறுதியில் உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா..ஏன்னா, இந்த வாட்டி “ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..” என்று கூறி விஜய் சேதுபதி நக்கலாக சிரிப்பதுடன் ப்ரோமோ முடிகிறது.

ஒவ்வரு முறையும் பல சுவாரஸ்யங்களை ஏற்படும் இந்நிகழ்ச்சி இம்முறை என்னனென்ன ஏற்படுத்த போகிறது என்பதை காத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top