Connect with us

தரமான சம்பவம் லோடிங் – ‘இந்தியன் 2’ படத்தின் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Cinema News

தரமான சம்பவம் லோடிங் – ‘இந்தியன் 2’ படத்தின் மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

திரையரங்குகளில் விரைவில் வெளியாக இருக்கும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் மிக முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

கமல்ஹாசன் – ஷங்கர் காம்போவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படம் இந்தியன் . இப்படத்தின் அட்டகாச வெற்றிக்கு பின் கடந்த 2019ஆம் ஆண்டு இப்படத்தின் 2 ஆம் பாகம் பூஜையுடன் தயாராக ஆரம்பித்தது .

இப்படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், எஸ்.ஜே.சூர்யா என பெரும் நட்சத்திர பட்டாளமே கமிட்டானது . இப்படத்தில் முதன்முறையாக ஷங்கருடன் இணைந்து அனிருத் இசையமைத்துள்ளார்.

என்னதான் பூஜை போட்டு ஆரம்பிக்கப்பட்டாலும் இந்த படத்திற்கு அடி மேல் அடி விழ படம் நடுக்குமா என்ற அளவுக்கு ஏகப்பட்ட இன்னல்களை இந்த இப்படம் சந்தித்தது .

இதையடுத்து பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து தற்போது ஒருவழியாக அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது .

இந்நிலையில் ஜூலை 12 ஆம் தேதி வெளியாக உள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கு யு/ஆ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் முழு நீளம் 3 மணிநேரம் என தணிக்கை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினிக்கு 74 வயசு… ஆனா கூலி படத்தில் செய்த சம்பவம் உங்களுக்கு தெரியுமா?

More in Cinema News

To Top